லேண்ட்லைன் மற்றும் பைபர் நெட் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக பிஎஸ்என்எல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, லேண்ட்லைன் மற்றும் பைபர் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மற்றும் விளம்பர நோக்கத்திற்காகவும் சேவை இணைப்புகளுக்காண நிறுவுதல் கட்டணத்தை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லேண்ட்லைன் பிராட்பேண்ட் காப்பர் ஒயர் இணைப்பிற்கு 250 ரூபாயும்,பைபர் இணைப்பு திட்டத்திற்கு 500 ரூபாய் நிறுவுதல் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு இந்த கட்டணம் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும் அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களுக்குள் இது பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
“குஷியோ குஷி”… 90 நாட்களுக்கு தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு ….!!!
