Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய்…. இன்று முதல்….!!!!

புதுவையில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தொடர் மழையால் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்தனர். அதன்பின்னர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதையடுத்து மத்திய குழுவினர் கடந்த மாதம் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் அந்த மாநில முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு மழை நிவாரணமாக மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாயும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு 4,500 ரூபாயும் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 2,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மழை நிவாரணம் வழங்கும் பணியை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருட்கள் அரசு நிறுவனமான அமுதசுரபி மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |