Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….! “மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான சலுகை”….. எப்.டி., வட்டி விகிதத்தில் மாற்றம்….!!!!

மூத்த குடிமக்கள் பொதுவாக லாபகரமான வட்டி விகிதங்களை வழங்கும் ஆபத்து இல்லாத நிதி பரிவர்த்தனைகளில் தங்களது சேமிப்புகளை உயர்த்தவும், பணத்தை முதலீடு செய்யவும் விரும்புகிறார்கள். ஆராய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) மூத்த குடிமக்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாகவே இருக்கின்றன. ஏனெனில் எப்.டி.,கள் எந்தவிதமான நிதி அபாயமும் இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் அடிக்கடி கொண்டிருக்கும் கவலைகளில் ஒன்று வரி திட்டமிடல் ஆகும். வரி திட்டமிடல் இல்லாமல் செய்யும் எந்த முதலீட்டும் உங்கள் வருமானத்தை கரைத்துவிடும்.

வரி சேமிப்பு எப்.டி., என்பது வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரியைச் சேமிக்க முதலீடு செய்ய அனுமதிக்கும் ஒரு நிதி விருப்பமாகும். வரி சேமிப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்வதற்கான குறைந்தபட்ச காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை எஃப்டியில் சேமிக்கும் போது அவர்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. வரி-சேமிப்பு எப்.டி.,கள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவு, வரிச் சேமிப்பு எப்.டி.,களில் உங்கள் பணத்தைப் போட்டால் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற வழிவகை செய்கிறது.

ஒரு மூத்த குடிமகன் பணத்தை சேமிக்க விரும்பினால், வரி சேமிப்பு எப்.டி.,கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்தத் திட்டமானது 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால வரம்பைக் கொண்டிருப்பதால், வரி சேமிப்பு எப்.டி.,களில் முன்கூட்டியே திரும்பப் பெறுவது அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது. உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப நீங்கள் முதலீடுகளை தேர்வு செய்யலாம்.

சேமிப்புக் கணக்கு உள்ள வங்கியில் எப்.டி., கணக்கைத் திறப்பது நல்லது. இருப்பினும், நீங்கள் லாபகரமான வட்டி விகிதங்களைப் பெறும் வேறு எந்த நிதி நிறுவனத்தையும் தேர்வு செய்யலாம். உங்கள் வரிச் சேமிப்பு எப்.டி., முதிர்வு நேரத்தில், அந்தத் தொகை உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.

நிதி நிறுவனங்கள் மற்றும் வரி-சேமிப்பு எப்.டி., களுக்கான வட்டி விகிதங்கள்

தபால் சேமிப்பு வங்கி – 7.4%
பாரத ஸ்டேட் வங்கி – 6.30%
யூனியன் வங்கி – 5.90%
இந்தியன் வங்கி – 5.75%
பேங்க் ஆப் இந்தியா – 5.70%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 5.95%
ஆக்சிஸ் வங்கி – 6.50%
சிட்டி யூனியன் வங்கி – 5.25%
டிசிபி – 7.10%
ஹெச்டிஎப்சி வங்சி – 6.10%
ஐசிஐசிஐ வங்கி – 6.10%
ஐடிபிஐ வங்கி – 6.35%
இன்டஸ்இந்த் வங்கி – 7.00%
ஆர்பிஎல் – 6.80%
கோட்டக் வங்கி – 6.25%
கரூர் வைஸ்யா – 5.90%
எஸ் பேங்க் – 7.00%
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் – 6.50%

Categories

Tech |