தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த மாதம் 5 கிலோ சமையல் சிலிண்டர்களின் விற்பனை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாநிலங்களிலும் ரேஷன் கடைகளில் இருந்து ஐந்து கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிலிண்டர்களை நுகர்வோர்கள் ரேஷன் கடைகளில் நிரப்பிக் கொள்ள முடியும்.
இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடைகள் மூலம் சோட்டு ஐந்து கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 14 மாவட்டங்களில் மொத்தம் 72 கடைகள் கே-ஸ்டோர்ஸ் என முத்திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இந்த சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.