கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாநிலத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக குறைந்த பட்சம் 21 நாட்கள் அமலில் இருக்கக்கூடிய புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கனடாவில் ஓமிக்ரான் பரவலின் வேகம் இனிவரும் காலங்களில் மிக அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்த எச்சரிக்கை முன்னிட்டு கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாநிலம் குறைந்த பட்சம் 21 நாட்கள் அமலில் இருக்கக்கூடிய புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தனியார் மற்றும் அரசு நிதி வழங்கும் பள்ளிகளில் கட்டாயமாக நடப்பு மாதம் 17ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் திரையரங்குகள் உட்பட பல மையங்கள் மூடப்படும் என்றும் ஒன்டாரியோ அரசு தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி வணிக வளாகங்கள், திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் போன்ற விழாக்களுக்கு 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.