கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது வீட்டு வாடகை சலுகையும் உயர்கின்றது. நீண்ட நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உள்ளது. அகவிலைப்படியை உயர்த்திய பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி கிடைக்கும்.
அதன்படி அகவிலைப்படியுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை படி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் வீட்டு வாடகை சலுகை அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். அதில் அதிகபட்சமாக HRA விகிதம் 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்த பட வாய்ப்புள்ளது.
X,Y,Z வகுப்பு விவரங்களின்படி வீட்டு வாடகை சலுகை வழங்கப்படுகின்றது. அதில் x பிரிவில் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 27 சதவீதம் HRA வழங்கப்படுகின்றது. Y பிரிவில் 18 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், z வகுப்பு பிரிவில் 9 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்கும். இதையடுத்து 7-வது ஊதிய கமிஷன் கணக்கீட்டின்படி மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.56,900 ஆகும். அதன்பிறகு ஊழியர்களின் HRA 27 சதவீதமாவது கணக்கிடப்படுகின்றது.