தேசிய பென்ஷன் திட்ட சந்தாதாரர்கள் இனி முதலீட்டு முறையை மாற்றிக்கொள்ள முடியும் என்று பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேசிய பென்ஷன் திட்ட சந்தாதாரர்கள் அனைவரும் தங்கள் முதலீட்டு முறையை ஒரு நிதி ஆண்டுக்கு 4 முறை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும்.
தற்போதைய சூழலில் தேசிய பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர்கள் தங்கள் முதலீட்டு முறையை ஒரு நிதி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். இந்நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீட்டு முறையை ஆண்டுக்கு 4 முறை வரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.