தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியன் – பிரிசில்லா தம்பதியின் மகள் திருமணம் திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அமைச்சர் கயல்விழி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஜான் பாண்டியன், தென் தமிழகத்தில் தொழில் வாய்ப்பை அதிகரிக்கக் கூடிய நோக்கத்தில் திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து எஸ் இந்தியா கேன் என்ற பெயரில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த கூடிய நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூடிய வகையில் ஒரு புதிய தளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். கிராமப்புறங்களில் இருக்கின்ற பெண்கள் நகரங்களுக்கு வராமல் இருக்கும் இடங்களிலேயே தங்கள் திறமைகளை பயன்படுத்தி தொழிலில் முன்னேற முடியும். அவ்வகையில் பெண்கள் தங்களுக்கு உள்ள திறமையை பயன்படுத்தி தொழிலில் முன்னேறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதாவது தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் எஸ் இந்தியா கேன் அமைப்பு சார்பாக திருப்பூரில் வால்ரஸ் நிறுவனத்தின் மூலமாக துணிகளை வாங்கி அதனை ஆடையாக தைத்து சந்தை படுத்தலாம்.
இதனால் ஏராளமானோர் தொழில் வாய்ப்பை பெற முடியும் என்று அவர் கூறியுள்ளார். அதன் பிறகு பேசிய வால்ரஸ் நிறுவன உரிமையாளர் டேவிட், புதிய தொழில் தொடங்க வாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. உற்பத்தி மட்டுமல்லாமல் சந்தைப்படுத்துதல் வரை அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9843077722 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தென்மாவட்ட பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.