நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் நடப்பாண்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் ஹோட்டல்கள், சினிமா அரங்குகள், உணவகங்களில் 50 சதவீத இறக்கைகளுடன் இயங்க அனுமதி. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், பொழுதுபோக்கு பூங்காகளுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.