Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க”….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாக்களிலும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால், நாட்டுப்புற கலைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.ர் இதன் விளைவாக கலைநிகழ்ச்சியில் ஈடுபடும் நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது நாட்டுப்புற கலைகளை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றனர். இவ்வாறு நாட்டுப்புற கலைகள் தொடர்ந்து அழிந்து கொண்டே வருகின்றது. இதனை கட்டுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை ஒரு பகுதியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியை ஒரு பகுதியாக நடத்த வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் ஆலைகள், கல்வி நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இப்படி அனைத்து நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புற கலைகளை ஒரு பகுதியாக கொண்டு வருவதன் மூலம் நாட்டுப்புற கலைகளை தொடர்ந்து பாதுகாக்க முடியும். நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையும் செம்மைப் படுத்தப் படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |