Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. திருப்பதி பக்தர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தினமும் திருப்பதிக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் அனைவரும் சுமார் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் பக்தர்களின் நலன் கருதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் குறிப்பாக பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் மற்றும் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடர் விடுமுறை நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு காத்திருப்பு அறைகளில் அத்தியாவசிய பொருள்கள் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பக்தர்களுக்கு திருமலை அன்னதான கூடத்தில் 24 மணி நேரமும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |