Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி….. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடத்திலேயே சரிபார்த்து தரமான அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் . ரேஷன் கடைகளில் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் .

மக்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது.இதனை அனைத்து நியாய விலை கடை ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |