Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக முழுவதும் மாதம் ரூ.1000…. அரசு புதிய அதிரடி முடிவு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இதை எடுத்து ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற தகுதியான மாணவிகளின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலான இயக்குனர்கள் மற்றும் மண்டல இணை பதிவாளர்கள் ஆகியோருடன் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Categories

Tech |