Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிரடி உத்தரவு….!!!

இன்று (மார்ச்7) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏதேனும் ஒன்று உள்ளது. மேலும் ஆண்டுதோறும் இதில் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாவட்ட மக்களைத் தவிர்த்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இந்த விழாக்களில் பங்கெடுக்க மக்கள் அனைவரும் கலந்து கொள்வர். இதன் பொருட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, இன்று (மார்ச் 7) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்றைய நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு மார்ச் 26ம் தேதியன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சனிக்கிழமை வழக்கமாக பணி நாளாக செயல்படும்   அலுவலகங்களுக்கு மார்ச் 27 அன்று பணி நாளாக எடுத்துக்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

Categories

Tech |