Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!!…. தமிழகத்தில் இவர்களுக்கு “மானியத்தோடு வீடு”…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் இன்னும் நான்கு மாதத்தில் முடிவடைகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் 38 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்  கட்டப்படும் என கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி வீடுகள் ‘எ’ முதல் ‘ஈ’ வரை கொண்ட 13 பிளாக்குகளில் தரைத்தளம் மற்றும் 4  அடுக்கு  குடியிருப்புகள் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட உதவி நிர்வாக பொறியாளர் கூறியதாவது.

மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் 90 சதவீத பணிகள் தற்போது நடந்துள்ளது. இன்னும் 4  மாதத்தில் பணிகள் முடிந்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும். இந்த வீடுகள் திருவாரூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் வீடு தகுதி பெறும்  பயனாளரின் குடும்ப ஆண்டு வருமான மூன்று லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு இந்தியாவில் எந்த பகுதியில் சொந்தமாக கான்கீரீட்   தளம் போட்ட வீடுகள் இருக்கக் கூடாது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும்  வீடு ஒதுக்கப்படும். மீதம் வீடுகள் இருந்தால் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீட்டின் மதிப்பு 13 லட்சம் ஆகும்.

வீடுகளை பெறும் பயனாளிகளுக்கு மத்திய அரசு 1 லட்சத்து 50 ஆயிரம், மாநில அரசு 7  லட்சம் என மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதனையடுத்து அவர்கள் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி வீடுகளை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் இணைய விரும்பும் பயனாளர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றை  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர்களது பட்டியல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிந்துரை செய்து  வீடுகள் ஒதுக்கப்படும் என அவர்  கூறியுள்ளார்.

Categories

Tech |