Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் நிதியுதவி ரூ.1,00,000 ஆக உயர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த நிதியுதவி தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் களும் அந்தந்த மாவட்டங்களில் ஊடகங்கள் மற்றும் இணையதளம் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே மறுமுறை விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு பணி அமைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து 10 ஆதிதிராவிடர், பழங்குடியினர்,ஆதிதிராவிடர் அல்லாத இனத்தை சேர்ந்த ஒரு எழுத்தர் உள்ளிட்ட 11 எழுத்தர்களின் சிறந்த இலக்கியப் படைப்பினை தெரிவு செய்து அவர்களுக்கு தலா 50,000 அல்லது புத்தகம் வெளியிட ஆகும் செலவு, இவற்றில் எது குறைவோ அதை அரசு வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த நிதியுதவியை வருகின்ற நிதியாண்டு முதல் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |