நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தி நேற்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இனி முதல் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும். அதனைப் போலவே இரண்டாம் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி வரை வீட்டு கடன் வழங்கலாம். கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என்ற ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் வரம்பை அதிகாரப்பூர்வமாக உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வீட்டுக் கடன்களை முன்பாகவே செலுத்தி முடிப்பதற்கு கட்டணம் அல்லது அபராதம் வசூலிக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடனை அடைப்பதற்கு அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை கொடுக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.