தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.எனவே நியாய விலை கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் தங்களது கோரிக்கை குறித்து கவலைப்படாமல் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிய நிலையில் ரேஷன் கடை ஊழியர் களுக்கு இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் ரேஷன் கடை ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.