Categories
உலக செய்திகள்

குஷியோ குஷி…. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்….. விண்ணில் ஏவியது தென் கொரியா….!!!

தென்கொரியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் “நூரி” ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மூன்று நிலைகளில் இயங்கக்கூடிய நூரி ராக்கெட் பூமியிலிருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோளை துல்லியமாக செலுத்தியது.

இதன் மூலம் செயற்கைகோளை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும், பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறன் தங்களிடம் இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் நான்கு நூரி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தப்படும். அதுமட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை ஏவுகணையை உருவாக்க தென்கொரியா திட்டமிட்டுள்ளது. மேலும் சொந்த தொழில் நுட்பத்தில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் 10 வது நாடாக தென்கொரியா உள்ளது.

Categories

Tech |