கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவு வேலைவாய்ப்பு மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக இந்திய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் மூலம் தெரியவந்துள்ளது. மே மாதம் மட்டும் 3,30,000 வேலை வாய்ப்புகளுக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, உற்பத்தித் துறை, சுகாதாரம், ஆட்டோ மொபைல்ஸ், மீடியா, விளம்பரத்துறை மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் அதிகமான வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனைப் போலவே கல்வி, மருத்துவம் துறை,சரக்கு போக்குவரத்து மற்றும் வினியோகம் ஆகிய துறைகள் சார்ந்தும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஓராண்டில் மட்டும் 61 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனிடையே ஐடி துறையில் வேலைவாய்ப்பு சரிந்துள்ளது.இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது