நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூலை 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலத்தில் ஊரடங்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் போன்றவை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காலணிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஃபேன்ஸி பல்பொருள்கள் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.