Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….! “இனி இதற்கும் விடுமுறை”…..  அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

பிரசவத்தின் போது குழந்தை இறந்தாலும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும் போதோ அல்லது குழந்தை பிறந்து இறந்து போனால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்த உத்தரவில் மத்திய அரசின் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறந்து இறந்தாலோ அல்லது பிறந்த பின் சிறிது நாட்கள் கழித்து இறந்தால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். குழந்தை இறப்பதால் ஏற்படும் மன உளைச்சல் தாயின் வாழ்வில் மிகப்பெரிய துக்கம்.

இதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் தாய்மார்களின் குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதால் விடுப்பு அல்லது மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான விளக்கத்தை கோரி தங்களுக்கு பல குறிப்புகள் மற்றும் கேள்விகள் கிடைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் கலந்த ஆலோசனை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை இறப்பினால் ஏற்படும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |