Categories
உலக செய்திகள்

குவைத்தில் ஒரே நேரத்தில் 7 பேருக்கு தூக்கு தண்டனை…? எழுந்து வரும் கண்டனங்கள்..!!!!

குவைத்தில் ஏழு வருடங்களுக்குப் பின் மீண்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குவைத்தில் 1960 -ஆம் வருடம் தொடங்கி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம்  மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் துக்கிலிடப்ட்டதாக அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான குனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3  ஆண்கள், ஒரு பெண், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், சிரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர், எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆகிய   7  பேர் தூக்கிலிடபட்டதாக அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மனிதர்களில் மிகவும் புனிதமான உரிமையாகிய உயிர் வாழும் உரிமையை அவர்கள் பிறரிடம் இருந்து பறித்த காரணத்தினால் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பு நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017- ஆம் வருடம் அரசு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்றுமுன்தினம்  7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த தண்டனைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆம்னெஸ்டி பொது மன்னிப்பு சபை, இது போன்ற தண்டனைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவை மிகவும் கீழ்த்தரமானவை, கொடூரமானவை, மனிதத் தன்மையற்றவை என விமர்சனம் செய்துள்ளது.

Categories

Tech |