கருத்துக்களை கேட்பதற்காக கொள்கை முடிவெடுத்து குழு அமைத்து அதில் என்ன தவறு என்று நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக கொள்கை முடிவு எடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக பாஜகவின் கரு நாகராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கருத்துக்களை கேட்பதற்காக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து குழு அமைத்து அதில் என்ன தவறு? என்று அவருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நீட்தேர்வு தாக்கம் பற்றி ஆராய ஏ கே ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது அல்ல. குழு தரும் பரிந்துரைகளின்படி உச்ச நீதிமன்றத்தின் நீட் தேர்வு குறித்து அரசு வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.