Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழிக்குள் பாய்ந்த டிராக்டர்…. சுதாரித்து கொண்ட விவசாயி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

குழியில் விழுந்த டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவளகுட்டை பகுதியில் விவசாயியான வேலு என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை வேலு தனது டிராக்டரை பவளகுட்டையில் இருந்து அந்தியூர் நோக்கி ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய டிராக்டர் கிணறு போல இருந்த சாலையோர குழிக்குள் பாய்ந்தது. உடனடியாக வேலு டிராக்டரில் இருந்து வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை அடுத்து குழியில் இருந்த தண்ணீரை அகற்றிவிட்டு டிராக்டரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

Categories

Tech |