அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனத்திற்கு குழாய் மூலம் எரிவாயு வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள 61 நகரங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்குதல் மற்றும் கார்களுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் தொடர்பான முடிவுகளை பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் நேற்று வெளியிட்டது. சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் நகரங்கள் தவிர மற்ற நகரங்களில் ஏலத்திற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 14 நிறுவனங்களுக்கான ஏல உரிமையை அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 13 நகரங்களுக்கான உரிமையை ஹைதராபாத்தை சேர்ந்த மேகா இன்ஜினியரிங் நிறுவனம் பெற்றுள்ளது. அதோடு இந்தியன் பெட்ரோலிய நிறுவனம் கன்னியாகுமரி மதுரை உட்பட 8 நகரங்களுக்கான உரிமையை பெற்றுள்ளது.