குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமருகல் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குழாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்தது.
இதனால் தண்ணீர் வெளியேறி சாலை ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இந்த உடைப்பை சரி செய்வதற்காக அதிகாரிகள் அப்பகுதியில் பள்ளம் தோண்டினர். ஆனால் இதுவரை உடைப்பையும் சரி செய்யவில்லை,அந்த பள்ளத்தையும் மூடவில்லை. இதனால் அந்த பள்ளத்தில் ஆடு, மாடுகள் தவறி விழுந்து விடுகிறது. எனவே குடிநீர் குழாயை சரி செய்யவும், பள்ளத்தை மூடவும் அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி புகார் அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.