Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தை முதல் பாட்டி வரை… என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா… இயக்குனர் ரத்ன குமாரின் உருக்கமான பதிவு…!!!

இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார் ‌. இதையடுத்து இவர் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை படத்தை இயக்கியிருந்தார். மேலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ரத்ன குமார் வசனகர்த்தாவாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வீடு’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |