காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குழந்தை திருமணம் செய்த 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 17 வயதிற்குட்பட்ட 9 சிறுமிக்கும், 16 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகளுக்கும், 15 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகள் 13, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என மொத்தம் 20 சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமிகளை சட்ட விரோதமாக திருமணம் செய்த 20 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையின் சார்பில் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சார்பில் குழந்தை திருமண தடுப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமான புகார்கள் இருந்தால் 1098 மற்றும் 100 இந்த எங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.