Categories
தேசிய செய்திகள்

குழந்தை திருமணங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு பயங்கர உயர்வு… இந்த மாநிலம்தான் முதலிடம்…!!!

2020 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைத் திருமணத்திற்கான வழக்குகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் குழந்தை திருமண வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குழந்தை திருமணங்கள் அல்லது அது குறித்த புகார்கள் அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 885 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. அங்கு 184 வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த இடத்தில் அசாம் 108 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 98 வழக்குகளும், தமிழ்நாட்டில் 77 வழக்குகளும், தெலுங்கானாவில் 62 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு பெண்ணோ, 21 வயதுக்கு கீழ் உள்ள ஒரு ஆணும் திருமணம் செய்து கொண்டால் அது குழந்தை திருமணம் என்று அழைக்கப்படுகின்றது. எனினும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருக்க வாய்ப்பு கிடையாது எனவும், குழந்தை திருமணங்கள் சம்பந்தமாக புகார்கள் அதிகரித்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குழந்தை திருமணம் என்பது பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இதனால் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் சேர்ந்து பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |