Categories
தேசிய செய்திகள்

குழந்தை என்னுடைய சாயலில் இல்ல… 2 மாத பெண்குழந்தையை இரக்கமின்றி கொன்று வீசிய… சந்தேக சைக்கோ…!!!!

பிறந்த குழந்தை தன்னுடைய சாயலில் இல்லை என்பதற்காக இரக்கமின்றி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கல்யாணம் நகரை சேர்ந்த தம்பதியான மல்லிகார்ஜுனா மற்றும் சிட்டமா ஆகியோருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தை தன்னுடைய சாயலிலும் இல்லை, தன்னுடைய குடும்பத்தினர் சாயலிலும் இல்லை என்று கூறி மனைவி மீது சந்தேகப்பட்ட மல்லிகார்ஜுனா சிட்டமாவை அடித்து உதைத்து தகராறு செய்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று குழந்தையை அழைத்துக்கொண்டு இருவரும் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது குழந்தை அழுததால் மல்லிகார்ஜுனா நான் குழந்தையை வைத்துக் கொள்கிறேன் என்று கூறி வாங்கி சென்றுள்ளார்.

பின்னர் அருகில் உள்ள ஏரி கறைக்குச் அழைத்து சென்று குழந்தையின் வாயில் பிளாஸ்டர் ஒன்றை ஒட்டி மூச்சுத்திணற வைத்து கொலை செய்து ஒரு பையில் போட்டு ஏரியில் வீசி சென்றுள்ளார். குழந்தையுடன் சென்ற கணவன் காணாமல் போனதால் சந்தேகமடைந்த சிட்டமா அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் மல்லிகார்ஜுனாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்தபோது மனைவி மீது சந்தேகம் அடைந்தாலும், தனது குழந்தை தன் சாயலில் இல்லை என்பதாலும், அதனை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் தெரிவித்தார். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Categories

Tech |