குழந்தை இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் மாணிக்கம் அடிக்கடி வைஷ்ணவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து விரக்தியடைந்த வைஷ்ணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற கடமலைக்குண்டு காவல்துறையினர் வைஷ்ணவியின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிர்க்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த நிலையில் திருமணமாகி 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்துகொண்டதால் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷிப் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.