Categories
சினிமா

குழந்தை இருக்கிறது…! பிங்க் நிற உடையில் வாசகம்…. பிரபல நடிகைகைக்கு ரசிகர்கள் வாழ்த்து….!!!!

இந்தி நடிகரான ரன்பீன் கபூர் மற்றும் அவருடைய மனைவி ஆன நடிகை ஆலியாபட் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிரம்மாஸ்திரா ஆகும். இந்த திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார் மற்றும் ஷாருக்கான், தீபிகா படுகோன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் 5 வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருக்கிறது. இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் இந்த மாதம் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ஐதராபாத்தில் நேற்று நடந்த பிரம்மாஸ்திரா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகை ஆலியாபட் பிங் நிற ஆடையணிந்து வந்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர், குழந்தை இருக்கிறது என்ற வாசகம் பொறித்த ஆடையை அணிந்து வந்து, தான் கருவுற்றிருப்பதை சூசகமாக வெளிப்படுத்தினார். இதனை கவனித்த ரன்பீர்கபூர் உள்ளிட்ட படக் குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் இந்த படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. விரைவில் பெற்றோர் ஆகவுள்ள ரன்பீர்கபூர் – ஆலியாபட் தம்பதியினருக்கு பலரும் தங்களை வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அவற்றில் சுவாரசியம் என்னவெனில், பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின்போது அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க துவங்கினர். 5 ஆண்டு பழக்கத்துக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் நடைப்பெற்றது. சென்ற ஜூன்மாதம் ஆலியா பட் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதை அவர் முதன் முதலில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |