Categories
உலக செய்திகள்

குழந்தையை புடவையில் மறைத்து வைத்திருந்த தாய்… குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்… வழக்கில் கிடைத்த முக்கிய தகவல்…!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுலா சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

பிரிட்டன் ஈராக்கை சேர்ந்த பொறியாளர் Saad al-hillli என்பவர் அவரின் மனைவி Iqbal, அவரின் தாய் மற்றும் இவர்களின் 7 வயது மகள் Zainab ஆகியோருடன் பிரான்சில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அங்கு வந்த ஒரு மர்ம நபர் இவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் Zainab தவிர அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளில் அவ்வழியே வந்துள்ளார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தடவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த Zainab உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் விசாரணைக்கு பின்பு சுமார் 8 மணி நேரம் கழித்து தடவியல் நிபுணர்கள், இறந்து கிடந்த அவர்களை மீட்டபோது Saad al-hillliயின் மனைவி Zeena என்ற தன் 4 வயது குழந்தையை தன் புடவைக்குள் மறைத்து வைத்திருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர்.

கடந்த 2012 ஆம் வருடத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவத்தில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

அதாவது பாரிசில் இருக்கும் ஒரு லாட்ஜில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய குற்ற கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பிரான்சில் நடந்த கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டுகள் போன்று அபூர்வமானது. எனவே அதிக முக்கியத்துவம் உள்ளதாக கருதப்பட்ட நிலையில் முடக்கப்பட்ட வழக்கு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |