பிரபல தொழிலதிபர் தன்னுடைய குழந்தையை பட்டம் பூச்சி போல பறக்க விட்டுள்ள வீடியோ பார்ப்போரை ரசிக்க வைக்கிறது.
இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் ஹர்ஷா கோயங்கா. சென்சார் டெக்னாலஜிஸ், ஸியாத் டயர்ஸ் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவருகிறார். இவர் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
தற்போது அழகான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு பட்டாம்பூச்சி போல பறக்க விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் குழந்தையின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
The cutest butterfly…https://t.co/j9vkDvmxBx
— Harsh Goenka (@hvgoenka) November 24, 2020