காஞ்சிபுரத்தில் பெண் ஊழியர் தேர்தல் பணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார் .
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சந்தோஷ்குமார் – பத்மாவதி தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பத்மாவதி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு கல்யாணம் முடிந்து 20 வருடங்கள் கழிந்தும் குழந்தையில்லாத காரணத்தினால் மத்திய அரசின் தத்துப் பிள்ளைகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் குழந்தையை தத்தெடுக்க முடிவு மேற்கொண்டு பதிவு செய்து வந்தனர் . இதற்கிடையே தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கன்வாடி ஊழியரான பத்மாவதியை தேர்தல் பணியாற்ற உத்தரவிட்டார்கள்.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி மத்திய அரசின் விதிமுறைகளோடு ஒரு ஆண் குழந்தை பத்மாவதிக்கு தத்து கொடுக்கப்பட்டது. இதனால் பத்மாவதி, தன்னால் தேர்தல் பணியை ஆற்ற இயலாது என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் விண்ணப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்மாவதியிடம் தெரிவித்துள்ளார்கள்.