பெரம்பலூர் மாவட்டம் புறநகர் பகுதியில் பொன்னுசாமி என்பவர் தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் மோகன்ராஜ் அவருடைய மனைவி சுகி மகன் தேவேஷ், மகள் தன்ஷிகா என்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர். மோகன்ராஜ் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சுகி கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுகியின் தாய் பிரேமா பெரம்பலூருக்கு வந்து சுகியுடன் இணைந்து வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுகி மற்றும் மோகன்ராஜ் இருவரும் வேலைக்கு சென்ற பின்னர் பிரேமா குழந்தைகளை கவனித்து வந்த நிலையில் காலை 10.30 மணி அளவில் தன்ஷிகாவை காணவில்லை என்று தேடினார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் சேர்ந்து குழந்தையை தேட தொடங்கினர். சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்த கழிவுநீர் தொட்டியில் தன்சிகா கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்த மோகன்ராஜ் மற்றும் சுகி இருவரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிய வேண்டாம் எனவும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் கூறி குழந்தையின் உடலை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.