Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்தி சென்ற பெண்…. 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பெண் கடத்தி சென்ற குழந்தையை போலீசார் மூன்று மணி நேரத்தில் மீட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியில் உள்ள ரோஜா தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்கேவால்-அனிதா தம்பதியினர் தங்களது 2 பெண் குழந்தைகளுடன் வந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் ராம்கேவால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓசூர் பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்தபோது தங்களது 6 மாத பெண் குழந்தை காணாமல் போனதை கண்டு கணவன், மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றது உறுதியானது. இதனை அடுத்து ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் குழந்தையை கொண்டு சென்ற பெண்ணை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். மூன்று மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |