Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தாயான 16 வயது சிறுமி…. உடந்தையாக இருந்த பெற்றோர்…. வாலிபர் போக்சோவில் கைது…!!

16 வயது சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு இளவரசனின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சிறுமிக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து குழந்தையின் தாய்க்கு 16 வயதுதான் ஆகிறது என்பது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஜெயம்கொண்டம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் இளவரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |