Categories
பல்சுவை

குழந்தைக்காக இப்படி ஒரு தியாகமா?…. இது அல்லவா தாயின் குணம்…. வியக்க வைக்கும் பாசம்….!!!

அனைத்து உறவுகளைக் காட்டிலும் தாய் என்ற உறவே சிறந்தது. தன் பிள்ளைகளுக்காக எத்தகைய தியாகங்களையும் செய்யக்கூடிய குணம் தாய்க்கு மட்டுமே உண்டு. அதிலும் ஒரு சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து இருப்பார்கள். அப்படி ஒரு தாய் தான் இவரும். எஜிப்ட் நாட்டில் சிசா என்ற பெண் கடந்த 43 வருடங்களாக ஆணாக வாழ்ந்து வருகிறார். ஏனென்றால் இவருக்கு கல்யாணம் முடிந்து கர்ப்பமாக இருக்கும் போது அவரது கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

அதன் பிறகு இவருக்கு உதவுவதற்கும், உறுதுணையாகவும் யாரும் இல்லை. அதனால் தனது குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். ஏனென்றால் அந்நாட்டில் பெரும்பாலான இடங்களில் பெண்கள் வேலை செய்வதற்கு அனுமதி கிடையாது. அதனால் தனது குழந்தை ஒரு நாளும் பசியில் தூங்க கூடாது என்பதை எண்ணி தன்னை ஒரு ஆணாக மாற்றிக் கொண்டார். ஆண்களைப்போலவே ஆடை அணிந்து கொண்டு உருவத்தையும் அதனைப் போலவே மாற்றிக் கொண்டு தன்னை பெண் என்று யாரும் அறியாத வகையில் 25 வருடங்களாக சாலையோரம் ஷூ பாலிஷ் போட்டு வாழ்ந்து வந்தார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவருடைய குழந்தை வளர்ந்து ஆளாகும் வரை இது தன்னுடைய அம்மா என்று தெரியாது. தன்னுடைய அப்பா தான் என்று நினைத்துக் கொண்டு குழந்தையும் வளர்ந்துள்ளது. அதனால் அப்பா என்ற எண்ணத்திலேயே குழந்தை இருக்கட்டும் என்று கருதி தற்போது வரை தன்னை ஒரு ஆணாகவும் குழந்தைக்கு அப்பாவாகவும் காட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு செயலை தாயால் மட்டுமே செய்ய முடியும்.

Categories

Tech |