நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால் அவர்களுக்கு கொடுக்கும் உணவு மிகவும் முக்கியம். அவர்களுக்கு என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அதிக அறிவுத் திறனும் பெற்று வளர வேண்டுமென்றால் அவர்களுக்கு நாம் கொடுக்கும் உணவும் ஒரு பங்காக இருக்கும். எனவே அவர்களுக்கு கொடுக்கும் உணவை மிகவும் பார்த்துக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் 5 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலில் அதில் இடம் பிடிப்பது பால். இதில் புரதம், கொழுப்பு, கால்சியம், மக்னீசியம் போன்றவை உள்ளதால் காலை மாலை என இரண்டு வேளைகளில் கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
வாழைப்பழம், இதில் பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் பல்வேறு உறுப்புகள் செயல்பட உதவும். வாழைப்பழம் மட்டும் இல்லாமல் மற்ற பழங்களையும் கொடுக்கலாம்.
சத்து அதிகம் உள்ள முட்டையை நாம் வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் அவசியம்.
உலர்ந்த திராட்சையில் இரும்புச்சத்து நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதனை ஊற வைத்து கொடுத்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
அன்றாடம் ஏதேனும் ஒரு பருப்பை உணவு வகையில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. புரதம் மற்றும் தாது நிறைந்த உணவுகள் நம் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான அமையும்.
நம் குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுப்பதை தவிருங்கள். அதிலுள்ள பொருட்கள் நம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.