Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

குழந்தைகளை தவிக்கவிட்ட தாய்… கல்லூரி மாணவனுடன் ஓட்டம்.. வீட்டிற்குள் கணவர் சடலமாக மீட்பு..!!

விழுப்புரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் கணவரை கொன்று விட்டு கல்லூரி மாணவருடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனையபுரம் என்ற காலனியை சேர்ந்த லியோ பால் மற்றும் சுசித்தா மேரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த வருடம் கொரோனாவால் வேலையிழந்த லியோ பால் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பியுள்ளார்.

அப்போது ஊரடங்கால் அவர்களை ஊரில் விட்டுவிட்டு தான் மட்டும் சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு சென்று ஓட்டுநராக லியோ பால் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுசித்தா, புதுச்சேரியில் உறவினர் திருமணத்திற்கு சென்ற லியோ பாலை காணவில்லை என்று தன் மாமனாரிடம் கூறியுள்ளார். இதனால் பதறிய அவர் உடனடியாக விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு மருமகளை வரச் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து புறப்பட்டு வந்துள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மருமகள் வராததால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தன்  பேரக்குழந்தைகள் தாயை காணாமல் தவித்து வந்ததை கண்ட அவர் மேலும் அதிர்ச்சிகுள்ளானார். இதனால் உடனடியாக காவல் நிலையம் சென்று தன் மகன் காணாமல் போனதில் மருமகள் மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அவரின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டபோது வீட்டிற்குள் சந்தேகப்படும் வகையில் இருந்த இடத்தை தோண்டியுள்ளனர். அங்கு லியோ பாலின் உடல் புதைக்கபட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சுசித்தா அருகில் வசிக்கும் கல்லூரி மாணவர் ராக்கி என்பவருடன் காதல் கொண்டு பல இடங்களில் சுற்றி திரிந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னையிலிருந்து லியோ பால் திரும்பியதால் கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாததால், மது போதையில் இருந்த லியோ பாலை சுசித்தா கடுமையாக தாக்கி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து வீட்டிற்குள் புதைத்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |