Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை அச்சுறுத்திய குரங்கு” பொதுமக்களின் கோரிக்கை…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை  வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர், கலைஞர் நகர், காந்திநகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே குரங்கு ஒன்று புகுந்து குழந்தைகளை  அச்சுறுத்தி வருவதோடு மட்டும் இல்லாமல்  வீடுகளுக்குள் நுழைந்து தின்பண்டங்களையும் தூக்கி சென்று விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் குரங்கை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து நேற்று வனக்காப்பாளர் ராஜேந்திரன், சவரியார் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று   முனியப்பன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த குரங்கை நீண்ட நேரம் போராடி  பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். அதன்பின்னர் அந்த குரங்கை  அய்யலூர் வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |