ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குடும்பத்தால் கைவிடப்பட்டவரின் குழந்தைகள், விவாகரத்து பெற்றவர், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெற்றோரால் பாதுகாப்பு தர இயலாத குழந்தைகள், உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிப் போன குழந்தைகள், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பிச்சை எடுத்து தெருவோரம் சூழ்நிலையில் வாழும் குழந்தைகள், பிரதம மந்திரி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு நிதி உதவி உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட மிஷன் வர்ஷா வட்சாலயா நெறிமுறைகளின் அடிப்படையில், நிதி உதவி தொகையானது 2000 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே இதில் பயன்பெற விரும்பும் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 72,000, இதர பகுதிகளில் வசிப்பவருக்கு 96,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய 0424 2225010 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.