Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து அரசு சார்பில் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என் கே அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் , குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி -மார்ச் மாதத்தில் தொடங்கும். அதில் முதலில் இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக ஒவ்வொரு அம்சத்தையும் உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போதுமான விநியோகத்தையும் இருப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். விலை முடிவு செய்ய வேண்டும்.

சுகாதார பணியாளர்களுக்கு கூட பயிற்சி அளிக்க வேண்டும். இதையெல்லாம் செய்து முடித்த பிறகுதான் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.குழந்தைகளுக்காக கோர்பேவேக்ஸ், கோவாவேக்ஸ், ஜைகோவ்-டி, கோவேக்சின் ஆகிய 4 தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும். இவை குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறிஉள்ளார்.

Categories

Tech |