காப்பீடு என வரும் போது ஏராளமானவர்கள் எல்.ஐ.சி நிறுவனத்தையே தற்போதுவரை தேர்வு செய்கின்றனர். பலதரப்பட்ட மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, முதலீடு, சேமிப்பு என பலவகையான நோக்கங்களை எல்.ஐ.சி காப்பீட்டு திட்டங்கள் வழங்குகிறது. அண்மையில் எல்ஐசி குழந்தைகளுக்காக ஜீவன் தருண் என்ற ஒரு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் சேமிப்பு,பாதுகாப்பு என 2 அம்சங்களின் கலவை ஆக அறிமுகமாகியுள்ளது என்றும் இது குழந்தைகளின் எதிர் கால கல்விக்கு தேவையான நிதியுதவியை வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவன்தருண் பாலிசியில் குறைந்தபட்சம் காப்பீட்டுத் தொகை ரூ.75,000, அதிகபட்சமாக இவ்வளவு தான் என்று எத்தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை. காப்பீட்டுத்தொகை ரூ1,00,000 வரை ரூ.5000 என்ற அடிப்படையில் அதிகரித்துக் கொள்ளலாம். ரூ.1,00,000-க்கு மேற்பட்டு சென்றால் ரூ10,000 எனும் அடிப்படையில் காப்பீட்டுத்தொகையை அதிகரித்துக் கொள்ளலாம். காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்சம் வயது -90 தினங்கள் ஆகும். அதேபோன்று காப்பீட்டுத்திட்டத்தில் இணைவதற்குரிய அதிகபட்சம் வயது -12 வருடங்கள் ஆகும்
#காப்பீட்டுத்தொகையின் முதிர்வு காலம்– 25 வயதாகும்.
# அதன்பின் பாலிசியின் அதிகபட்சம் காலஅளவு – 25 வருடங்களாகும்
# அதிகபட்சம் பிரீமியம் செலுத்தும் காலம் – 20 வருடங்கள்
பிறந்தகுழந்தை முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு, அப்பா-அம்மா,தாத்தா-பாட்டி என யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியினை வாங்கலாம்.