குழந்தைகளின் கல்விக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு திட்டம் சிறந்த திட்டமாக விளங்குகிறது.
குழந்தைகளுக்கு தரமான உயர்கல்வி என்பது அவர்களின் வாழ்நாள் முழுவதற்குமான சிறந்த முதலீடாகும்.இன்றைய காலகட்டத்தில் உயர்கல்விக்கு நிறைய செலவாகிறது. இது எதிர்காலத்தில் இன்னும் கூடுதலாக உயரக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டியதாகும். அதனால் பிள்ளைகளின் கல்விக்கு எவ்வாறு முதலீடு செய்வது அதிக லாபம் ஈட்டுவது?. இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிப் (sip) முறையில் முதலீடு செய்வது சிறந்த வழியாகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதந்தோறும் சிறு தொகையாக தொடர்ந்து முதலீடு செய்வது தான்.
இதில் உங்களின் முதலீடு நீண்ட கால அடிப்படையில் மரம் போல் வளர்ந்து பயன் தரும். மாதம் 500 ரூபாய் கூட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மூலம் முதலீடு செய்துகொள்ளலாம். தேவைப்பட்டால் முதலீட்டு தொகையை அதிகரித்துக் கொள்ளலாம். உயர்கல்விக்கு முதலீடு செய்வதை பொருத்தவரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். பணவீக்கத்தின் பாதிப்பை நீக்கி உங்கள் முதலீட்டுக்கு 12 சதவிகிதம் லாபம் கிடைப்பதாக எடுத்துக்கொள்வோம். உங்களின் முதலீடு 11.50 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும். 15 ஆண்டுகளின் இறுதியில் 25.3 லட்சம் ரூபாய் ஆக மாறியிருக்கும்.
மேலும் 20 ஆண்டுகளில் 49.96 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். அதனால் தரமான திட்டங்களில் சிப் முறையில் மாதம் தோறும் உங்களால் முடிந்த மியூச்சுவல் ஃபண்ட் தொகையை முதலீடு செய்து வந்தால் நீண்ட கால அடிப்படையில் லாபம் கிடைக்கும். மேலும் இந்த பணத்தை குழந்தைகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்தலாம். தொழில், திருமணம்செய்வதற்கும் இந்த முறை மூலம் முதலீடு செய்துகொள்ளலாம்.