மாணவியை தவறாக படம் பிடித்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் பின்வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்தவர் சாரி ஷியாம். இவர் பிரிட்டிஷ் கொலம்பியா ஓகனகன் பல்கலைகழகத்தில் பயின்று வருகின்றார். இந்நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் டெய்லர் என்ற மாணவி குளியலறையை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது ஷியாம் மறைந்திருந்து அவரை மொபைலில் படம் பிடித்துள்ளார். இதை கவனித்த அந்த மாணவி ஷியாமை கையும் களவுமாக பிடித்து அவரின் மீது புகார் அளித்துள்ளார்.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த கான்ஸ்டபில் ரியான் ரூட்லேய் என்பவர் “இவர் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர், இவர் மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு வேலை எதுவும் கிடைக்காது என்று ஷியாமுக்கு ஆதரவாக பேசி இந்த வழக்கில் இருந்து திடீரென பின்வாங்கியுள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் காரணத்தால், கேப்டன் தானியா கர்ரோல் என்பவர் ஷியாம் மீது வழக்கு பதிவு செய்து இந்த வழக்கை மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக பொறுப்பேற்றுள்ளார்.