குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே புல்லன்விலை பகுதியில் குட்டப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புலியூர்குறிச்சி பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் குளிப்பதற்காக மேக்கரை பகுதியிலிருக்கும் குளத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் குட்டப்பன் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது குளத்தின் கரையில் குட்டப்பனின் உடைகள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழித்துறை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் குளத்திற்குள் இறங்கி தேடி பார்த்ததில் குட்டப்பன் பிணமாக கிடந்துள்ளார். உடனே தீயணைப்புத்துறையினர் குளத்திலிருந்த குட்டப்பனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.