தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காட்டாம்புளி பகுதியில் தயா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாய்க்காலில் வேகமாக வந்த தண்ணீர் தயாவை இழுத்து சென்றுள்ளது. இதனால் காப்பாற்றுங்கள் என தயா சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் தயாவை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.
ஆனால் அதற்குள் தயா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர தயாவின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் தயாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.